tamilnadu

img

வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக மோசடி- மூவர் கைது

கோவை, ஜூலை 31-  வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் வரையில் மோசடி செய்து தலைமறை வாக இருந்து வந்த தனி யார் வேலைவாய்ப்பு நிறுவ னத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டு காலமாகவே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இந்த மோசடியாளர்களை விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதற்காகவே, மாந கரம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் தனிப்பிரிவுகளை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், 2017-ம் ஆண் டில் மோசடி செய்து தலைமறைவாக இருந்த 3 பேரை தனிப்படை காவல்துறையினர் செவ்வாயன்று கைது செய்தனர்.  இதுகுறித்த விவரம் வருமாறு, கர்நாடக மாநிலம் பெங்களூரூ பகுதியைச் சேர்ந்த வர்கள் வானதி சுரேந்தர் (54) மற்றும் மகன் ராஜீவ் (34). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இடைத் தரகர் தங்கராஜ் (50) உதவியுடன், கோவை வடவள்ளி அருகே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் தனியார் ஏஜென்ஸியை நடத்தி வந்தனர். இந்த ஏஜென்சியின் விளம்பரங்களைக் கண்டு பலர் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தினர். ஆனால், செலுத்திய பணத்திற்கான வேலையும் கிடைக்க வில்லை, பணமும் திருப்பித் தரப்பட வில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்க ளில் ஒருவரான பேராசிரியர் பினுமோல் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்டோர் அடுக்கடுக்காக புகார் அளித்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.  இந்த நிலையில், 2 ஆண்டுகள் கழித்து தனிப்படை காவல்துறையினர் பெங்களூ ரில் வைத்து வானதி சுரேந்தர் மற்றும் ராஜீ வையும், சேலத்தில் வைத்து தங்கராஜை யும் கைது செய்தனர். மேலும், கைது செய் யப்பட்ட இவர்கள் சுமார் ரூ. 35 லட்சத் திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

;