tamilnadu

img

இ-பாஸ் இல்லாமல் தமிழகத்திற்குள் வந்தவர்கள் சோதனைச் சாவடியில் நிறுத்தம்

கோவை, ஜூன் 29- கோவை மாவட்டம், தமிழ்நாடு - கேரளா எல் லையான வாளையார் சோதனைச் சாவடியில் வெளிநாடுகளில் இருந்து  வந்த தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களைச் சேர்ந்த  40க்கும் மேற்பட்டவர் கள் இ-பாஸ் இல்லாத கார ணத்தினால் காவல் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டு, பிறகு சொந்த  ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக ரித்து வரும் நிலையில் மாநில, மாவட்ட எல்லைகளில் கடுமையான சோத னைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படு கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு-  கேரளா எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் துபாய், சவுதி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த தாகவும், கடந்த 3 மாதங்களாக வேலை யில்லாத நிலையில் தாய்நாடு திரும்பிய தாகவும் தெரிவித்தனர். மேலும் ஞாயி றன்று காலை எல்லைக்கு வந்தவர்களிடம் இ-பாஸ் இல்லாத காரணத்தினால் அனைவ ரையும் தமிழகத்தில் அனுமதிக்கமால் வரு வாய்துறை அதிகாரிகளும், காவல் துறையி னரும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 இதுதொடர்பாக வெளிநாடுவாழ் மக்கள் கூறுகையில்,  எங்களில் பெரும்பா லானோர் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இத னால் இ-பாஸ் பதிவு செய்து அனுமதி கிடைக்காத நிலை உள்ளது.

அதே சமயம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கேட்டால் பாஸ்போர்ட் காண் பித்துவிட்டு வாருங்கள் என்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு அதிகாரிகள் அனு மதி அளிக்கவில்லை என்கின்றனர். சிலர் தனியார் விடுதிகளில் பணத்தை செலுத்தி தனிமைப்படுத்தப்பட்டு பிறகு சொந்த மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

ஆனால்  வேலையில்லாமலும், கையில் பணம்  இல்லாமல் வந்த நாங்கள் எப்படி பணம்  கட்டி தனிமைப்படுத்தி கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினர்.  

இதன்பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை வட்டாட்சியர் சரண்யா இதுகுறித்து விசாரணை மேற் கொண்டார். அதன்பின்னர் அனைவருக் கும் கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டு சொந்த மாவட்டங்களுக்கு அனுப் பப்பட்டனர். மேலும், 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறி வுரைத்துள்ளனர்.

;