tamilnadu

img

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சேலம், ஜூன் 5-சேலம் அருகே குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ள பகுதியில் அமைக்கப்படும் செல்போன் கோபுரத்தை அகற்றிடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள அமானி கொண்டாலாம்பட்டி காட்டூர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ஜியோ நிறுவனத்திற்குச் சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சட்ட விதிமுறைகளை மீறி, மருத்துவமனை மற்றும் பள்ளிக்கு மிக அருகே அமைக்கப்படும் இந்த செல்போன் கோபுரம் உயர் மின் அழுத்தத்தைக் கொண்டு செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது. குடியுருப்புகளுக்கு மிக அருகே அமைக்கப்படும் இந்தக் கோபுரத்திற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் முதல் நாள் இரவு திடீர் என்று கோபுரம் அமைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், புதனன்று காலை திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டு  மக்களை பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள செல்போன் கோபுரத்தை உடனடியாக அகற்றிட வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.