tamilnadu

img

ரத்தான தேர்வுகளுக்குக் கட்டணம் வசூலிப்பு? தனியார் கல்லூரிகளின் அடாவடி- அதிர்ச்சியில் மாணவர்கள்

கோவை, ஆக. 10- கோவையில் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனங்கள் ரத்தான தேர்வுகளுக்கும் கட்ட ணம் வசூலித்து வருவது மாணவர் கள் மற்றும் பெற்றோர்கள் மத்தி யில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகளில் பயி லும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர அனைவரும் தேர்ச்சி பெற்ற தாக அரசின் சார்பில் அறிவிக்கப் பட்டது. அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களை கல்விக் கட்டணம் கட்டவும் வற்புறுத்தக்கூடாது என அரசால் அறிவுறுத்தப்பட்டது. இத னால் ஏப்ரல் - மே வாக்கில் செமஸ் டர் தேர்வெழுதக் காத்திருந்த பொறியியல் மற்றும் கலை, அறி வியல் கல்லூரி மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், தேர்வுகள் முழு வதும் ரத்தானதால் நடக்கவிருக் கும் தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணத்தை முன்னமே செலுத் திய மாணவர்கள் அத்தொகை யினை திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்ற னர். இத்தகைய சூழலில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என அரசு அறிவித்த பின்னரும், அத்தேர்வுக ளுக்கான கட்டணத்தைக் கட்டச் சொல்லி ஒருவர் விடாமல் மாண வர்களிடம் வசூலித்துக் கொண்டி ருக்கிறது கோவையைச் சேர்ந்த தனியார் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி நிர்வாகங்கள்.

குறிப்பாக, இந்த ஆண்டுக்கான பருவ கட்டணம் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், நடத்தப்படாத தேர்வுக்கான கட்ட ணமும் ஒருவர் விடாமல் வசூலித்து வருகிறது. அதோடு குறிப்பிட்ட நாளுக்குள் கட்டாவிடில், தாமத மாகும் ஒவ்வொரு நாளுக்கும் அப ராதத் தொகையும் சேர்த்து வசூலிக் கப்படுவதாகத் தெரிகிறது. இத னால் அதிர்ச்சியடைந்த மாண வர்களும், பெற்றோர்களும் எதிர் காலம் கருதி வேறு வழியின்றி ரத் தான தேர்விற்கான கட்டணத்தை யும் கட்டி வருகின்றனர். கல்லூரிகள் செயல்படாமல் உள்ள இக்காலகட்டத்தில் பல மாணவர்கள் தற்போது குடும்ப சூழ்நிலையின் காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் பலர் இடை நிற்று வேலையே எதிர்காலமாக மாற்றிக் கொள்ளும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. அத்தகைய நிலையில், ஏற்கனவே ஊரடங் கால் வேலையின்றியும், வருமான மின்றியும் வாடிவரும் குடும்பங்க ளிலிருந்து கல்வி கற்கும் மாண வர்களிடம் இவ்வாறு அடாவடி யாக கட்டணம் வசூலிக்கும் நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு வதும், இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு நிர்வாகமும், பல் கலைக்கழகங்களும் கண்டும், காணாமல் இருப்பதும் ஊரடங் கால் வாழ்விழந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. (ந.நி)

;