tamilnadu

img

தேடப்பட்டு வந்த யானை வேட்டை கும்பலின் தலைவன் கைது

மேட்டுப்பாளையம், செப். 21- மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் ஆண் காட்டு யானைகளை வேட் டையாடி அதன் தந்தங்களை விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த  வேட்டை கும்பலின் தலைவன்  சனியன்று மேட்டுப்பாளையத் தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  யானைகள் கூட்டம் கூட்ட மாக ஆண்டுதோறும் வலசை செல்லும் பாதைகளாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காடுகளை இணைக்கும் முக்கிய வனப்பகு தியாக மேட்டுப்பாளையம் மற்றும்  சிறுமுகை வனச்சரக பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் இவ் வனப்பகுதிகளில் யானைகள் நட மாட்டம் அதிகமிருப்பது வழக்கம். கடந்த 2011 ஆம் ஆண்டு மேட் டுப்பாளையம் வனத்தில் மூன்று ஆண் யானைகளும், சிறுமுகை வனப்பகுதியில் ஒரு யானையும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டு அதன் தந்தங்கள் கடத்தி  செல்லப்பட்டன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மேட்டுப் பாளையம் மற்றும் சிறுமுகை  வனத்துறையினர் குற்றவாளி களை தேடி வந்தனர்.  இந்நிலையில், சிறுமுகை வனப்பகுதியில் யானையை கொன்ற வழக்கில் வனச்சரகர் மனோகரன் தலைமையிலான குழுவினர் கடந்த ஜனவரி மாதம் தேனி மாவட்டம், வருசநாடு பகு தியை சேர்ந்த சிங்கம் மற்றும் குபேந்திரன் என இருவரை கைது  செய்து விசாரணை மேற்கொண் டனர். இதில், மேட்டுப்பாளையம், சிறுமுகை மட்டுமின்றி நீலகிரி மாவட்டம், சீகூர், வல்லக்கடவு  மற்றும் தேனி மாவட்டம், வருச நாடு ஆகிய பகுதிகளில் ஒன்பது காட்டு யானைகளை இவர்கள் வேட்டையாடி அதன் தந்தங்களை  கடத்தியதும் தெரிய வந்தது. இக்கும்பலுக்கு கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம், மத திப்பாறை  என்னுமிடத்தை சேர்ந்த  செட்டியார் என்றழைக்கப்படும் பாபு ஜோஸ் தலைவனாக செயல் பட்டதும் தெரிய வந்தது. இதனை யடுத்து தமிழக வனத்துறை பாபு ஜோஷை தீவிரமாக தேடி வந்தனர்.  இந்நிலையில் ஒரு வனக் குற்ற  வழக்கில் சனியன்று பாபு ஜோஸ்  மேட்டுப்பாளையம் நீதிமன்றத் தில் ஆஜராக வருவதை அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறை யினர் அவரை கைது செய்ய நீதி மன்றத்தின் வெளியே காத்திருந் தனர். அப்போது பாபு ஜோஸ் நீதிமன்றத்தின் வெளியே இருந்த ஒரு டீக்கடையில் அமர்ந்திருந்த போது கைது செய்யப்பட்டார். இதையடுத்து மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இக்கும்பலால் கொல்லப்பட்ட யானைகளை புதைத்த இடங்களுக்கு பாபு ஜோசை அழைத்து சென்று விசா ரணை நடத்தினர். பின்னர் வன உயிரின பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு வனச்சட்டங் களுக்கு கீழ் கைது செய்யப்பட்ட அவரை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பின்னர் நீதிமன்ற உத்தி ரவின்படி பாபு ஜோஸ் கோவை  மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.  முன்னதாக, கள்ள துப்பாக்கி களை பயன்படுத்தி நீண்ட தந்தங் களை கொண்ட ஆண் காட்டு யானைகள் தொடர்ச்சியாக சுட்டு கொல்லப்பட்டு வந்தது.  இது வன உயிரின ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வந் தது. ஆண் யானைகள் கொல்லப் பட்டால் யானைகள் இனம் குறைந்து விடும், யானைகள் இல்லையெனில் காடுகள் அழிந்து விடும் என வேதனை தெரிவித்ததோடு தொடர்புடைய வர்களை கைது செய்ய வலியு றுத்தி வந்தனர். மேலும் தமிழக வனத்துறைக்கும் இந்த யானை வேட்டை கும்பல் பெரும் சவா லாகவே இருந்து வந்தது. இந் நிலையில், ஏற்கனவே இது தொடர்பாக சிங்கம் மற்றும் குபேந் திரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இவர்களுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த பாபு ஜோஸ் கைது செய்யப்பட் டுள்ளது இயற்கை நல ஆர்வலர் களிடையே வரவேற்பை பெற் றுள்ளது.