tamilnadu

img

2ஆம் கட்ட தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, டிச. 29- இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்ப தாக கோவை மாவட்ட தேர்தல் அலுவ லரும்,மாவட்ட ஆட்சியருமான கு.இராசா மணி ஞாயிறன்று தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சூலூர், சுல் தான்பேட்டை, எஸ்.எஸ்.குளம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத் தூர்,காரமடை உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றி யங்களில் டிச.30ல் நடைபெறுகிறது. இதில், 5,47,295 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள னர்.இரண்டாம் கட்ட தேர்தலுக்கு 415 வாக்குச்சாவடி மையங்களில் 878 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 152 வாக்குச்சவாடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள் ளது. இதில் 37 வாக்குச்சாவடி மையங்களில் ஒளிப்பதிவு செய்யவும்,  35 மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட உள்ளது. மீத முள்ள 80 வாக்குச்சாவடி மையங்கள் நுண் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் கண்கா ணிக்கப்படவுள்ளது.  இரண்டாம் கட்டத் தேர்தலில் 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பத விக்கு 46 வேட்பாளர்களும், 89 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 367  வேட்பாளர்களும், 101 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 383 வேட்பாளர்களும், 1014 ஊராட்சி வார்டு உறுப்பினர் பத விக்கு 3221 வேட்பாளர்களும் என மொத்தம் 1214 பதவிகளுக்கு 4017 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில், வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் உபகரணங் களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய் தார். இதனைத் தொடர்ந்து முதற்கட்ட வாக்குப்பதிவு எவ்வாறு எவ்வித அசம்பா விதமுமின்றி அமைதியாக நடைபெற் றதோ,அவ்வாறே இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் அனைத்து வித ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரு மான கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

;