tamilnadu

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து டிச.20ல் கோவையில் கடையடைப்பு - கருப்பு கொடி போராட்டம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அறிவிப்பு

கோவை, டிச. 16 -  குடியுரிமை சட்ட திருத்த மசோதா விற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டி ச . 20ம் தேதி கருப்பு கொடி ஏற்றி கடை அடைப்பு போராட்டத்திற்கு கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு’ அறிவிப்பு விடுத்துள்ளது.  கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்ட மைப்பினர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் பேசுகை யில், மத்தியில் ஆளும் பாஜக நிர்வாக ரீதி யான தோல்வியை மறைப்பதற்கு முத்தலாக் தடை சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்து ரத்து, குடியுரிமை சட்ட திருத்த மசோதா என சட்டங்களை இயற்றி வருகிறது. மதரீ தியாக மக்களை பிரிக்கும் சதி செயல்களை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மியான்மர், பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள அகதிகளுக்கு குடியு ரிமை மறுக்கப்பட்டு இங்கு உள்ள அகதி களை மத்திய அரசு வஞ்சிக்கிறது.  மத்திய அரசின் இந்த குடியுரிமை சட்ட திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையை கட்ட விழ்த்து விட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எப்படி மக்களி டையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டதோ அதே போன்ற ஒரு விழிப்புணர்வு இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற மக்களிடையே ஏற்பட வேண்டும். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான விளைவுகளை அவர்கள் விரை வில் சந்திப்பார்கள். இச்சூழலில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரி வித்து வரும் டிச.20ம் தேதி கோவையில் கருப்பு கொடி கட்டி, கடையடைப்பு போராட் டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக இந்த சந்திப்பில் ஐயுஎம்எல், தமுமுக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மனித நேய ஜனநாயக கட்சி, ஐஎன்டிஜெ, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகி கள் பங்கேற்றனர். 

;