tamilnadu

தலித் மூதாட்டியை ஏமாற்றி நிலத்தை அபகரித்த விவகாரம் பாஜக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு

கோவை, செப். 7 –  கோவையில் தலித் அருந்ததிய சமூ கத்தைச் சேர்ந்த மூதாட்டியை ஏமாற்றி  நிலத்தை பறித்த பாஜக பிரமுகர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட் டத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கோவை மதுக்கரை முஸ்லீம் காலனி பகுதியைச் சேர்ந்த கண்ணாம்மாள் அருந் ததிய சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் மூன்று சென்ட் இடத்தில் உள்ள வீட்டை இடித்தும், ஒரு சென்ட் இடத்தை போக்கி யம் என்று ஏமாற்றி எழுத்தறிவில்லாத மூதாட்டியிடம் பாஜக பிரமுகர் ஆறுமுகம் என்பவர் நிலத்தைப் பறித்துக்கொண் டார். இது குறித்து நியாயம் கேட்டபோது ஆறுமுகம் மற்றும் அவரின் மனைவி, மகன் ஆகியோர் மூதாட்டி கண்ணாம் மாள் மற்றும் அவரது மகள்களை இழி வாக பேசியும்,  சாதியின் பெயரைச் சொல்லி திட்டியும் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக மதுக்கரை காவல் நிலை யத்தில் புகார் கொடுத்த நிலையில்  காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டினர். இதனைத்தொ டர்ந்து கோவை மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் மூதாட்டி புகார் அளித் தார். இச்செய்தி  ஊடகத்தில்  பரவலாக  வெளியானது. இந்த அழுத்தம் காரண மாக ஆறுமுகம் மற்றும் அவரின் குடும் பத்தாரின் செயலை விசாரித்த காவல் துறையினர் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இதுகுறித்து மூதாட்டியின் வழக்கறி ஞர் சிலம்பரசன் கூறுகையில், இச்சட்டத் தின் மூலம் குற்றம் நிரூபிக்கபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்புள்ளது. மேலும், இந்துக்க ளுக்கான கட்சி பாஜக என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் அக்கட்சியினரே, இந்து மதத் தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மூதாட்டியை வன்கொடுமை செய் துள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார்.

;