tamilnadu

தேர்தலில் வலுக்கட்டாயமாக ஏற்படுத்திய "சுமூகத் தீர்வு"

காவிகளின் பிடியில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்

திருப்பூர், செப். 3 – திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் மாற்றத்துக்கான அணிஎன்ற முழக் கத்துடன் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், கடந்த நான்கு ஆண்டுக ளில் மிகப்பெரும் ஏமாற்றத்தையே பரி சளித்தனர். இதனால் தொழில் துறை யினர் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டு, போட்டி ஏற்பட்டது. ஆனால் காவிகளின் பிடியில் சிக்கியுள்ள இந்த சங்கத்தில் வலுக்கட்டாயமாக “அமைதிப் பேச்சுவார்த்தை” நடத்தி தேர்தல் போட்டியைத் தடுத்து “சுமூகத்தீர்வு”  கண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பின்னலாடைத் தலை நகர மான திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகளில் பிரதான மானது திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்கம். இந்த  சங்கம் அமைக்கப்பட்ட 1990ஆம் ஆண்டில் இருந்து நீண்ட காலம்  ஏ.சக்திவேல் தலைவராக செயல்பட்டு வந்தார். அவருக்கு எதிராக “மாற்றத்துக் கான அணி” என்ற பெயரில் ராஜா சண் முகம் தலைமையிலான ஒரு அணி 2013 ஆம் ஆண்டு களம் கண்டது. அந்த தேர்தலில் மாற்றத்துக்கான அணி தோல்வி அடைந்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏ.சக்திவேல் போட்டியிட வில்லை  என்று அறிவித்துவிட்டார். அப்போது ஏற்கெனவே இரு அணிகளாகப் போட்டியிட்டவர்கள் கலந்து பேசி போட்டியின்றி நிர்வாகிகளை தேர்வு செய்தனர். முந்தைய தேர்தலில் மாற்றத்துக்கான அணி சார்பில் களம் கண்ட ராஜா எம்.சண்முகம் தலைவராகவும், விஜயகுமார் பொதுச் செயலாளராகவும், மோகன் பொரு ளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

வெளிப்பட்ட அரசியல் சார்பு 

முன்னெப்போதும் வெளிப்படை யான அரசியல் சார்பைக் காட்டிக் கொள்ளாமல் செயல்பட்ட ஏற்றுமதி யாளர் சங்கத்தில், மாற்றத்துக்கான  அணியினர் வெளிப்படையாகவே தங்கள் அரசியல் சாயலைக் காட்டிக் கொண்டனர். குறிப்பாக சங்கப் பொதுச் செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி  ஆகியோர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர் களது பிடியில் சங்க நிர்வாகிகள் செயல்பாடு அமைந்திருந்தது.  குறிப்பாக 2013ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட போது, இந்த அணியினர் அவரை சந்தித்து தொழில்துறை கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்காக வெளிப்படையாகவே ஆதரவு திரட்டினர் இந்த அணியினர். “2020ஆம் ஆண்டு திருப்பூர் பின்ன லாடை வர்த்தகத்தை ரூ.1லட்சம் கோடி யாக உயர்த்தப் போவதாக” இவர்கள் போட்ட கூச்சல், கேட்பவர் காது செவி டாகும் அளவுக்கு பலமாக இருந் தது. ஆனால் இவர்கள் சங்க நிர் வாகிகளாகத் தேர்வு பெற்ற பிறகு கிடைத்த அனுபவம் கசப்பானதாக இருக்கிறது என்பதே உண்மை.

கசப்பான அனுபவம்
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, டிராபேக் குறைப்பு என அடுத் தடுத்து பாஜக அரசின் கொள்கை அறிவிப்புகளால் ஏற்றுமதி தொழில் சந்தித்த பாதிப்புகளை சங்க நிர்வாகிகள் என்ற முறையில் குறைந்தபட்சம் முணு முணுக்கக்கூடவில்லை. 30 சதவி கிதமான சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் காணாமல் போனது தான் மோடியின் ஆட்சிக் காலத் தில் திருப்பூர்கண்ட அனுபவ உண்மை. ஆனால் பாஜக, மோடியின் விசுவாசிகளாக வெளிப்படையாக காட்டிக் கொண்ட ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. மாறாக மத்திய  அரசின் ஒரு ஏஜென்சி போலத்தான் இந்த சங்கத்தை நடத்தினர்.

சங்கத் தேர்தல்
இந்த சூழ்நிலையில்தான் தற்போது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்திற் கான தேர்தல் நடைமுறை தொடங் கப்பட்டது. செப்டம்பர் 20 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுச் செயலாளராக உள்ள விஜயகுமாரை எதிர்த்து ஏற்கெ னவே சங்க செயற்குழு உறுப்பின ராக இருக்கும் குமார் துரைசாமி போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். அத்துடன் இரண்டு இணைச் செயலாளர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிட்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற் குரிய நடைமுறைகள் தொடங்கி வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு வாபஸ், வேட்பாளர் பட்டியல் இறு திப்படுத்தி வெளியிடப்படுவது வரை முடிவடைந்துவிட்டது. அதன் பிறகு திடீரென கடந்த வெள்ளி யன்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட்டதாக தகவல் வெளி யானது. பொதுச் செயலாளர் பதவிக்கு மனுச் செய்திருந்த குமார் துரை சாமி போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

உண்மை என்ன?
செப்டம்பர் 20ஆம் தேதி வாக் குப்பதிவு நடைபெற இருந்த நிலை யில் திடீரென சமரசம் ஏற்பட்டதாக வெளியான தகவல் பற்றி விசாரித்த போது உண்மை நிலவரம் தெரியவந்தது. குறிப்பாக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்து, பட்டியல் இறுதி செய்யப்பட்டு தகவல் பலகையில் வெளியிடப்பட்ட நிலையில், சில மணி  நேரங்களிலேயே வேட்பாளர் பட்டி யலைதகவல் பலகையில் இருந்து  நீக்கியுள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். அத்துடன் சங்கத்தின் முன் னாள் துணைத் தலைவர் பிரேம் துரை உள்ளிட்டோர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று சங்க அலுவலகத்தில் குமார் துரைசாமியுடன் “பேச்சு வார்த்தை” நடத்தியுள்ளனர். இப்போதுள்ள தொழில் சூழலில் இரு அணிகளாக போட்டியிடுவது நல்லதல்ல என்று “அக்கறையுடன்” அறி வுறுத்தி உள்ளனர். ஆனால் இப்போ துள்ள தொழில் சூழலுக்கான காரணம் என்ன, அதை எதிர் கொள்ள சங்கம் என்ன செய்தது போன்ற கேள்விகளை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு சங்க  நிர்வாகிகள், களத்தில் போட்டியிட முன்வந்த குமார் துரைசாமியை போட்டி யிடாமல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்.

அங்கிருந்த நிலமைகள், தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆரம்பத் தில் வெளிப்படையாக யார் வேண்டு மானாலும் போட்டியிடலாம் என அறிவித்து விட்டு, பிறகு ஏற்கெனவே இருந்த ஆர்எஸ்எஸ் சார்பு நிர்வாகி களுக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளார் என தெரியவந்தது. ஆர்எஸ்எஸ்  அமைப்பைச் சேர்ந்த சங்க நிர்வாகி களுக்கு, தொழிலைப் பாதுகாப்பது டன், ஏற்றுமதியாளர் சங்கம் தங்கள் பிடியில் இருக்க வேண்டும் என்பதி லேயே கண்ணும், கருத்துமாக இருந் துள்ளனர். மேலும் முக்கிய நிர்வாகி களாக இருப்பவர்கள் ஏற்றுமதியாளர் சங்கம் மட்டுமின்றி நிஃப்ட் டீ பேஷன் கல்லூரி நிர்வாகம் உள்பட ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங் களில் நிர்வாகிகளாகவும், பங்குதா ரர்களாகவும் இருப்பதாக கூறப்படு கிறது. எனவே “அவர்களுக்குள்ளே பொதுவான நலன்” என்ற அடிப்ப டையில் அவர்கள் “புரிந்துணர்வு” கொண்டவர்களாக இருப்பதாகவும் ஏற்றுமதியாளர் தரப்பில் தெரிவித்தனர். இத்தகைய ஒத்த மனநிலை உள்ள வர்கள் மொத்தத்தில் திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கத்தின் ஜனநாயக செயல்பாடு, தொழில் வளர்ச்சிக்கான பங்களிப்பு என்பதை விட, தங்களை பதவியில் தக்க வைத்துக் கொள்வதி லேயே குறியாக இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அற்றுப் போன நம்பிக்கை
இந்த சூழ்நிலையில்தான் ஜனநாய கப்படி போட்டியை எதிர் கொள்ளத் தயாராக இல்லாமல் போட்டியாளர் களிடம் “சமரசத் தீர்வு” கண்டுள்ளனர். குமார் ஆதரவு தொழில் துறையினரிடம் கேட்டபோது, தற்போது நிர்வாகி களாக இருப்பவர்கள் ஒரு ஜனநாய கப்பூர்வமான, நியாயமான தேர்தல் நடைபெறுவதை அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட் டது. அவர்கள் தங்களைப் பதவியில் தக்க வைத்துக் கொள்ள எந்த எல் லைக்கும் போவார்கள் என்பது கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. எனவேதான் தொழில் நலன் மற்றும் தொழில் துறையினர் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு குமார் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார் என்றனர். அத்துடன் குமாருக்கு இணைச் செயலாளர், துணைத் தலைவர் என வேறு பதவி கொடுத்து தங்களுடன் வைத்துக் கொண்டால், எல்லாம் சுமூகமாக முடிந்தது என்று காட்டிக் கொள்ள அவர்கள் கடும் முயற்சி மேற்கொண் டனர். ஆனால் அவர்கள் கொடுத்த பதவியை குமார் ஏற்கவில்லை.  சங்கம் மற்றும் தொழில் நலன் என்ற  அடிப்படையில்தான் போட்டியிட விரும்பினார், பதவிக்காக அல்ல  என்று குமார் கூறிவிட்டதாக அவரது தொழில்துறை நண்பர்கள் தெரிவித்த னர்.

காவிகளின் இறுகிய பிடி
இதற்கிடையே திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கத் தேர்தல் அறிவிக்கப் பட்ட நிலையில் பல்வேறு ஏற்றுமதி யாளர்களிடம் கருத்துக்கேட்டபோது, இப்போதுள்ள சங்க நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி னர். இவர்களை விட ஏ.சக்திவேல் எவ்வளவோ பரவாயில்லை, ஏதேனும் ஒரு வகையில் மத்திய அரசின் கவ னத்துக்கு பிரச்சனைகளை கொண்டு சென்று சிற்சில நடவடிக்கைகளை யாவது மேற்கொண்டார். ஆனால் இவர்கள் முழுக்க தங்கள் பதவியை பயன்படுத்தி வேறு மறைமுக நோக் கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிக்கின்றனர் என்று குற்றஞ் சாட்டினர். இந்த சூழலில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நேர்மை யான, நியாயமான முறையில் தேர் தல் நடைபெற்றிருக்கு மானால் தெளிவான, சரியான தீர்ப்புக் கிடைத் திருக்கும். ஆனால் அதை ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் செயல்படும் ஏற்றுமதி யாளர் சங்க நிர்வாகம் தடுத்துவிட்டது என்றும் கூறினர்.

(ந.நி)