துப்புரவு பணியாளர்கள் 80 சதவீதம் பேர் ஓய்வுக்கு முன்பே இறந்து விடுகிறார்கள்
தேசிய ஆணையம் கவலை
தேசிய ஆணையம் கவலை தஞ்சாவூர், ஜூலை 14- தஞ்சாவூரில் துப்புரவு பணியாளர்கள் நிலை குறித்த, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் நடைபெற்றது. தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜகதீஷ் ஹிர்மானி தலைமை வகித்து பேசுகையில், துப்புரவு தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள் மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் 80 சதவிகிதம் பேர் ஓய்வுக்கு முன்னதாகவே இறந்து விடுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீடு இல்லாத துப்புரவு தொழிலாளர்களுக்கு, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தர வேண்டும். இதுகுறித்து பட்டியல் தயாரிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 2,500 துப்புரவு தொழிலாளர்களில், 2000 பேருக்கு வீடுகள் இல்லை எனத் தெரிய வருகிறது மனிதர்கள் மூலமாகவே மனித கழிவுகளை அகற்றும் நிலையை மாற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் வன்கொடுமைக்கு ஆளானால், ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.450 வழங்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்கவும், சுய தொழில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பின்னர், தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 15 பேருக்கு மழைக் கோட்டுகள், துப்புரவு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.
சாலை விபத்தில் சாமுவேல்ராஜ், ஜெயராமன் காயம்!
கிருஷ்ணகிரி, ஜூலை 14- ஓசூர் சூடு கொண்டப்பள்ளியை சேர்ந்த நந்திஸ் - சுவாதி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆணவப்படு கொலை செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கு விசாரணை பெங்க ளூரு மாண்டியாவில் நடைபெற்று வரு கிறது. இதற்காக தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், சிபிஎம் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெய ராமன், நந்தீஸ் சகோதரர் சங்கர், திலக், முன்னணியின் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணவேணி, நாகேஷ் பாபு ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை மாண்டியாவிற்கு காரில் சென்றனர். பின்னர் அங்கி ருந்து மாலை 4 மணிக்கு பெங்க ளூரு புறப்பட்டனர். அப்போது எதிர்பாராதவித மாக கார் விபத்துக்குள்ளானது. இதில், கிருஷ்ணவேணிக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டது. ஜெயரா மன், நந்திஸ் சகோதர், திலக் ஆகி யோர் பலத்த காயமடை ந்தனர். கே. சாமுவேல்ராஜ், நாகேஙஷ் ஆகி யோருக்கு லேசான காயம் ஏற் பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அனை வரும் வீடு திரும்பினர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.