tamilnadu

img

பிரபல உணவக கட்டிடம் திடீர் இடிப்பு - ஊழியர்கள் காயம்

கோவை, ஆக. 12- கே.ஜி மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பிரபல ஸ்ரீ அன்னபூர்னா உணவகத்திற்கும் ஏற் பட்ட பிரச்சனையில், முன் அறிவிப்பின்றி உண வக கட்டிடம் இடிக்கப்பட்டதில் 4 ஊழியர்கள் காயமடைந்தனர்.  கோவை  நீதிமன்றம் அருகே கே.ஜி தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு ஸ்ரீ அன்னபூர்னா, ஸ்ரீகெளரிசங்கர் உணவகம் கடந்த 45 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாக உணவகம் செயல்படும் இடம் குறித்த பிரச்சனை நடைபெற்று வந்துள்ளது. உணவகத்தை காலி செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறி வந்துள்ளது. இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருந்துள்ளது.  இந்நிலையில் ஞாயிறன்று எவ்வித முன்ன றிவிப்பின்றி நள்ளிரவில் மருத்துவமனை நிர்வாகம் இரண்டு ஜே.சி.பி. இயந்திரம் மூலம் உணவக கட்டிடத்தின் ஒருபகுதியை இடித்துள்ளனர். அப் போது உணவகத்திற்குள் இருந்த நான்கு ஊழியர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்த தொழிலாளர்களை  மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர் இது தொடர்பாக ஸ்ரீஅன்னபூர்னா ஹோட்டல் நிர்வாகத்தினர் கே.ஜி மருத்துவமனை நிர்வாகத் தின் மீது பந்தய சாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு பிரபல நிர்வாகங்களுக்கிடையான பிரச்சனையில் திடீரென கட்டிடத்தை இடித்ததால் நான்கு ஊழி யர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.