tamilnadu

img

இலவச மடிக்கணினி கேட்டு மாணவிகள் ஆட்சியரிடம் மனு

நாமக்கல், ஜூலை 15- ராசிபுரம் தேசிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் இலவச மடிக்கணினி கேட்டு மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் 450க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியில் கடந்த ஜூலை 7 ஆம் தேதியன்று கணினி அல்லாத அறிவியல் பிரிவு மாணவிகளுக்கு இலவச மடிக் கணினி இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் கலைப்பிரிவை சேர்ந்த  26 மாணவி கள் மற்றும் அறிவியல் பிரிவில்  கணினி படிக்கும் 5 மாணவிகள் உட்பட 31 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசு பள்ளியில் படித்து வரும் எங்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும். மேலும் கல்வி சம்பந்தமான பல் வேறு விவரங்களை தெரிந்து கொள் வதற்கு மடிக்கணினி கட்டாயமாக தேவைப்படுகிறது. மற்ற மாணவிக ளுக்கு வழங்கியது போல் எங்களுக் கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திங்களன்று மாண வர்களும், பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு  ளித்தனர். இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.