tamilnadu

img

பெருந்துறை அருகே பள்ளியில் சாதிப்பாகுபாடு மாணவர்கள் ஆட்சியரிடம் புகார்

ஈரோடு, ஜூலை 29- பெருந்துறை அருகே அரசு பள்ளியில் சாதி பாகுபாடு காட்டும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சிங்காநல் லூர் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவி யர்கள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம், எங்கள் பள்ளியில் தலித் மாணவ, மாணவிகளிடம் சாதி பற்றி தலையாசிரியர் நீ என்ன சாதி, நான் என்ன சாதி, நீ என் பொருட்களையெல்லாம் தொடக்கூடாது என மிரட்டு கின்றார். அதனால் ஒரு மாணவி பள்ளிக்கு சரியாக வருவ தில்லை. தலைமையாசிரியர் சாதி அடிப்படையில் நடந்து கொள்வதாக மாணவ, மாணவிகள் வேதனைப்படுகிறோம். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மாணவ, மாணவி களை அழைத்து வேலை செய்ய சொல்கிறார்கள். இத னால் முழுமையாக கவனிக்க முடிவதில்லை.  அதேபோல பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தொடர்ச்சி யாக பாடம் நடத்துவதில்லை. சில மாணவ, மாணவிகளை தலைமையாசிரியர் அழைத்து கை, கால்களை அழுத்தி விட வேண்டும், பொருள்களை எடுத்துக் கொடுக்க வேண்டும், கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வர வேண்டும் என அடிமைகளைப் போல் நடத்துகிறார்கள். இப்பள்ளியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிக அளவில் படிக்கிறார்கள். அவர்களைப் படிக்க விடா மல் எப்பொழுதும் வேலை வாங்கிக் கொண்டே இருந்து வருகிறார். தலைமையாசிரியர் கிராமத்தில் உள்ள மாணவ மாணவியர்களின் பெற்றோர்களை  தரக்குறைவாக நடத்து வதுடன், அலையவிடுதல், பார்க்க வருபவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது என அவமானப்படுத்து கிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம். அவற்றில் சில கடிதங்களை தலைமை யாசிரியர் பிடுங்கி கிழித்து எறிந்து விட்டார். எனவே எங்களுக்கு இந்த தலைமை ஆசிரியர் வேண் டாம். புதிய தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும் என மாணவர்கள் அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.