tamilnadu

img

தேசிய அமெச்சூா் குத்துச்சண்டை போட்டியில்கோவை மாணவன் தங்கம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற 20 வது தேசிய அமெச்சூா் குத்துச்சண்டை போட்டியில், தமிழகத்தின் சார்பில் ஜீனியர் ஆண்கள் 34 கிலோ எடை பிரிவில், கோவை மாணவன் இளையபாரதி பங்கேற்று தங்கம் வென்றார். கோவை காமராஜபுரம் பகுதியை சார்ந்த இளையபாரதியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் பாராட்டி, சால்வை அணிவித்து கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் கிழக்கு நகர குழு உறுப்பினர் த.நாகராஜ் மற்றும் ரா.முரளிதரன், என்.ஜெகன், இளையராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.