நாமக்கல், பிப்.21- கழிவுநீரை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் வெள்ளியன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஒன்றியம் அலமேடு பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற் பட்டு வருகிறது. இந்த கழிவு நீரை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் பேரூ ராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர். ஆனால் பேரூ ராட்சி நிர்வாகம் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய் தனர். இதையடுத்து வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ராஜகோபால் தலைமை யில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன்,கட்சியின் ஒன்றிய செய லாளர் ஆர்.ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.