tamilnadu

img

அரசு பேருந்து கவிழ்ந்து பயணிகள் காயம்

கோவை, ஆக. 26–  அன்னூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கோவைக்கு அரசு பேருந்து  புளியம்பட்டி வழியாக திங்க ளன்று காலை அன்னூர் வந்து கொண்டிருந்தது. இந்த  பேருந்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள் ளனர். அப்போது, அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளை யம் பகுதியில் இரு சக்கர வாகனத்துடன் ஒருவர் தீடீரென சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அவரின் மீது பேருந்து மோதாமல் தவிர்க்க பேருந்து ஓட்டுநர் பேருந்தை  மறுபுறம் திருப்பியுள்ளார். ஆனால், பேருந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இதனையடுத்து, காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்தவர்களை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கருப்பசாமியும், பேருந்தில் மோதி உயிருக்கு ஆபத் தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.