tamilnadu

img

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் மருத்துவர் கைது

கோவை, மார்ச் 30-


கோவையில் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகில் கவுதம் கிளினிக்நடத்தி வருபவர் பிரபல சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமலிங்கம் ( 65). இவர்தன்னிடம் சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மருத்துவர் ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

;