tamilnadu

img

சாலையில் பெருக்கெடுத்துச் செல்லும் கழிவுநீர்

திருப்பூர், ஜூலை 4 - திருப்பூர் ராக்கியா பாளையம் பிரிவில் இருந்து மணியகாரம்பாளையம் செல்லும் சாலையில் கழிவு நீர் வடிகாலில் இருந்து வெளியேறி சாலையின் குறுக்கே பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மணியகாரம்பாளையம் சாலையில் இருந்து காசி பாளையம்  செல்லும் பகுதி யில் சாலையோரம் இருக்கும் கழிவுநீர் வடி காலில் இருந்து சாக்கடை நீர் கொள்ள ளவை விட அதிகமாகி சாலையில் வெளி யேறுகிறது. தினமும் ஆயிரக்கணக் கானோர் கடந்து செல்லும் இந்த சாலையில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ,  மாணவிகள், தொழிலாளர்கள், பொது மக்கள் உள்பட பலரும் இந்த கழிவுநீர் குளத்தைக் கடந்துதான் செல்ல வேண்டி யிருக்கிறது. ராக்கியாபாளையம், ஜெய்நகர் உள்பட  மக்கள் நெருக்கம் அதிகமுள்ள குடியி ருப்புப் பகுதியில் இருந்து இந்த கழிவுநீர் வாய்க்கால் வருகிறது. ஆனால் அந்த வாய்க்கால் சிறியதாக இருப்பதால் கழிவு நீர் சீராக கடந்து செல்ல முடியாமல் பெருக் கெடுத்து வெளியேறி சாலையில் செல் கிறது. எனவே இப்பகுதியில் தேவைக் கேற்ப கழிவுநீர் வடிகாலை அகலப்படுத்த வேண்டும். இந்த இடத்தில் கழிவுநீர் சாலையில் வடியாதபடி உயர்த்தி அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் வற்புறுத்துகின்றனர். எனினும் மாநகராட்சி நிர்வாகம் நீண்ட காலமாக இப்பிரச்சனையைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. பொதுமக்கள், குழந்தைகளின் சுகாதாரம் கருதி மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு இந்த இடத்தில் கழிவு நீர் வடிகாலை மாற்றி அமைத்து சாலையில் கழிவுநீர் செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர்.