tamilnadu

img

வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்- பொதுமக்கள் தவிப்பு

சேலம்,செப்.13- சேலம் மாவட்டம், இளம் பிள்ளை பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் வீடுகளில்  புகுந்ததால் பொதுமக்கள்  கடும் அவதிக்குள்ளாகி னார்.   சேலம் மாவட்டம், இளம் பிள்ளை பகுதியில் வியாழ னன்று கனத்த மழை பெய்தது. இச்சூழலில் சந்தைப்பேட்டை ஏரியின் கதவணை பராமரிப்பு இல் லாததால்தண்ணீர் அப்படியே வெளியேறியது. இதன்காரணமாக இளம் பிள்ளை அருகே உள்ள பெரு மாகவுண்டம்பட்டி பகுதி யில் உள்ள 50க்கும் மேற் பட்ட வீடுகளில் மழை நீருடன், கழிவுநீர்   புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளா கினார். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் குடியிருப்பு வாசிகள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினார்.   இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், ஏரி கதவணை பராமரிப்பு செய்யப் படவில்லை. மேலும் தண்ணீர் செல்லும் நீரோடைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. இது சம்பந்த மாக வருவாய்த்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விரைந்து போர்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தனர். 

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியில் உள்ள ஏரியின் மதகு உடைந்து தண்ணீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் வீடு களுக்குள் புகுந்தது. இதனால் தொற்று நோய் பரவாமல் இருக்க  மருந்து கலவை தெளிக்கப்பட்டது.

;