திருவனந்தபுரம், ஆக.10- திருவனந்தபுரம் கடற்கரையான சங்கு முகத்தில் கடல் அரிப்பில் 11 வீடு கள் தகர்ந்தன. இரண்டு படகுகள் கவிழ்ந்தன. வலியதுறை, பூந்துறை, பிமப்பள்ளி ஆகிய இடங்கில் சுமார் 100 வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் பலத்த காற்றுடன் வலுவான அலைகள் எழுந்து வருகின்றன. பூந்துறை, பீமாபள்ளி, சிறிய முட்டம் போன்ற இடங்களில் அதிக அளவு வெள்ள அபா யம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிமீ நீளமுள்ள கடல் சுவர் இடிந்து விழும் அபா யத்தில் உள்ளது. அலைகள் மண்ணை அரித்துச் செல்வதால் சுவர் சரிந்துள்ளது. உயரமாக எழும் அலைகள் அருகிலுள்ள வீடுகளை அடைகின்றன. முன் வரிசையில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பாதுகாப்புக்காக நிரப்பப்பட்ட மணல் மூட்டைகளையும் கடல் விழுங்கி விட்டது. கரையில் கிடந்த படகுகளும் சேதமடைந்தன. பெரும்பாலானவர்கள் நிவாரண முகாம்களுக்கு சென்றனர்.