சேலம் மாவட்டம், எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே.தஹில்ரமணி ஞாயிறன்று திறந்து வைத் தார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஜி.கே.இளந்திரையன், மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், சேலம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எஸ்.தீபா கணிகேர், சேலம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி எஸ்.குமரகுரு, சேலம் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் டி.முனுசாமி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.