tamilnadu

கொரோனா பாதிப்பு இல்லா மாவட்டமாக மாறிய சேலம்

சேலம், மே16- இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த அனைவரும் குண மடைந்து வீட்டுக்கு சென்ற னர். மாவட்டம் முழுவதும் 35 பேர் கொரோனா வைர சால் பாதிக்கப்பட்டு சேலம்  அரசு மோகன் குமாரமங் கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி மைப்படுத்தப்பட்ட இடத் தில் வைக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்தனர். இந்நிலை யில், இதுவரை 33 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிச் சென்ற நிலை யில், மீதமிருந்த இருவரும்  குணமடைந்து வெள்ளி யன்று வீடு திரும்பினர். இத னால், சேலம் மாவட்டத்தில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 இருப்பினும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி  மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை சேலம் ஓம லூர் பகுதியில் உள்ள  கருப்பூர் அரசு பொறியியல்  கல்லூரியில் அமைக்கப்பட் டுள்ள சிறப்பு முகாமில் ஒரு  வார காலம் தங்க வைத்து  பரிசோதித்து வருகின்ற னர். தற்போது சேலம் மாவட் டத்தில் பெரும் பாதிப்பு இல்லாத பொழுதும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக தொடர்ந்து கிருமி நாசினி தெளித்தல், தனி மனித இடைவெளிகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப் படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.  முன்னதாக, இந்த  செய்தியாளர் சந்திப்பின் போது சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்கு மார், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் தீபா கணிக் கர், மாநகராட்சி ஆணையா ளர் சதீஷ், சேலம் அரசு  மருத்துவமனை முதல்வர்  உள்ளிட்டோர் உடனிருந்த னர்.