tamilnadu

போலீஸ் சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீச்சு கோவையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கைது

கோவை, ஜன. 23– கேரள மாநிலம் கண்ணூர் அருகே யுள்ள கதிரூரில் ஆர்எஸ்எஸ்ஸின் கிளை அமைப்பைச் சேர்ந்தவர் காவல் துறையின் சோதனைச்சாவடி மீது வெடி குண்டு வீசி தலைமறைவாக இருந்தநிலையில் கேரள தனிப்படை போலீசார் வியாழனன்று கோவை யில் அவரை கைது செய்தனர். கேரள மாநிலத்தில் உள்ள கண் ணூர் பகுதியில் கடந்த ஜன.16 ஆம்  தேதியன்று போலீசாரின் சோதனைச்  சாவடி மீது மர்ம நபர் ஒருவர்  வெடி குண்டை வீசி தலைமறைவா னார். இச்சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் வழக்குப் பதிவு  செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.  இதைத்தொடர்ந்து  அந்தப் பகுதியில் இருந்த கண்கா ணிப்பு கேமராக்களின் மூலம் அடை யாளம் கண்டதில் தாக்குதல் நடத்தி யவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பிரபேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடு தல் வேட்டைaயில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவைக்கு விரைந்த போலீசார் வியாழனன்று பிரபேஷை அவரது உறவினர் வீட்டில் சுற்றி வளைத்து பிடித்தனர். இதன்பின்னர், போலீ சார் பிரபேஷிடம் நடத்திய விசாரணை யில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குச் சொந்தமான மனோஜ்சேவா கேந்தி ரத்தின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அப்பகுதியில் மோதலை உரு வாக்க முயற்சித்து வெடிகுண்டை வீசியதாகவும், அது எதிர்பாராத விதமாக போலீசாரின் சோதனைச் சாவடி மீது விழுந்தததாகவும் கூறியுள் ளார். இதையடுத்து தலச்சேரி நீதி மன்றத்தில் பிரபேஷை ஆஜர்படுத் திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கெனவே  பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலு வையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

;