tamilnadu

img

விஷவாயு தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

கோவை, ஜுலை 9- கோவை அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி யின்போது, விஷவாயு தாக்கி உயி ரிழந்தவர்களில் ஒருவரின் குடும் பத்திற்கு முதற்கட்டமாக ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் வழங்கினார். கோவை மாவட்டம், சரவணம் பட்டியை அடுத்த கீரணத்தம் பகுதி யில் கடந்த ஜுன் 27 ஆம் தேதியன்று சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்த மான பன்றி வளர்ப்பு மற்றும் இறைச்சி கூடத்தின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ராஜப் பன், வேடியப்பன் மற்றும் மற் றொரு வேடியப்பன் ஆகியோர் ஈடு பட்டிருந்தனர். அப்போது, எதிர் பாராதவிதமாக விஷவாயு தாக்கி யதில் மூவரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். இந்த சம்ப வம் தொடர்பாக இடத்தின் உரி மையாளர் சுப்பிரமணியத்தை கோவில்பாளையம் காவல்துறை யினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினரை கோவையிலுள்ள அரசு விருந்தி னர் மாளிகையில் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி செவ்வாயன்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின் னர், சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இதனை யடுத்து, மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திலுள்ள கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுஜித்குமார், மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முறையான கண்காணிப்பு

அப்போது, தேசிய துப்புரவு மறு வாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி பேசுகையில், கால்நடை பண்ணைகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர்கள் கால்நடைகளின் கழிவு குழிகளை அமைக்க முறையான அனுமதி பெற வேண்டும். இதுபோன்ற கழிவு களை அகற்ற மனிதர்களை பயன் படுத்துவதை தவிர்த்து இயந்தி ரங்களை பயன்படுத்த வேண்டும். மனிதர்களை பயன்படுத்துவதை தவிர்க்க இயலாத இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் உரிய அனுமதியினை முன்கூட்டியே எழுத்து வடிவில் பெற்று உரிய பாதுகாப்புடன் பயன்படுத்த வேண் டும். இதனை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதுடன், மலக்குழி மரணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் போதிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். 

ரூ.10 லட்சம் நிவாரணம்

இதையடுத்து விஷவாயு தாக்கி இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு ஊராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.30 லட்சம் ரூபாயை வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார். இதன்படி முதற்கட்டமாக உயிரிழந்த ராஜப்பன் என்பவரின் மனைவி சுந்தரியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் வழங்கினார். மேலும் விஷவாயு தாக்கி உயிரிழந்த இரு வேடியப்பன்களின் இறப்பு சான்றி தழ்கள் கிடைத்தவுடன், ஓரிரு நாளில் அவர்களின் குடும்பத்தாரிடம் நிதியு தவி வழங்க இருப்பதாகவும், அதற் கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி தெரிவித்தார்.

அரசு வேலை, குடியிருக்க வீடு 

முன்னதாக, இக்கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட தலைவர் ஆறுச்சாமி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் செயலாளர் கே.ரத்தினகுமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு பின்னர் யு.கே.சிவஞானம் கூறு கையில், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க அரசு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மலக்குழி மரணத்திற்கு காரணமாக உள்ள அனைவரும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும். விஷவாயு தாக்கி மரணமடைந்த குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலையும், குடியிருக்க வீடும் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி தரவேண்டும். இதேபோல் பாதிக்கப் பட்ட குடும்பத்தில் உள்ள மாண வர்களுக்கான கல்வி செலவு முழு வதையும் அரசே ஏற்க வேண்டும்.  மேலும், கோவையில் இதுவரை 16 பேர் விஷவாயு தாக்கி மரண மடைந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கும் அரசின் வீடு உள்ளிட்ட நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் வலி யுறுத்தினோம். இதனை தேசிய துப்பு ரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி ஏற்று, சம்மந் தப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

;