tamilnadu

தாராபுரத்தில் இன்று மின்தடை

தாராபுரம், ஆக. 16 - தாராபுரம் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளுக்காக சனியன்று மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, தாராபுரம் மின்வாரிய செயற்பொ றியாளர் மாகேஸ்வரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மின்சார வாரியம், பல்லடம் மின் பகிர்மான வட்டம், தாராபுரம் கோட்டம், தாராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சனியன்று (ஆக. 17) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பாறு டேம், பஞ்சப்பட்டி, சின்னப் புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளில் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.