tamilnadu

img

மதம், சாதியை விரட்டிடுவோம்- தமிழால் ஒன்றிணைவோம்

தருமபுரி, ஆக. 3- சாதியின் பெயரால், மதத்தின் பெய ரால் நம்மை பிரித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கடந்து தமிழால் நாம் ஒன்றிணைய வேண்டும் என தருமபுரி புத்தகத் திருவிழாவில் பால பிரஜாபதி அடிகளார் பேசினார். தருமபுரியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் வெள்ளியன்று ‘அறிவுசார் கருத்தரங்கம்’ ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் மு.வேடியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில்  “தமிழர் சமயம்’ என்கிற தலைப்பில்  பாலபிரஜா பதி அடிகளார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், நாட் டில் 450 மதங்கள் இருந்ததாக கூறப் படுகிறது.

ஆனால், அவை ஒன்றோடு ஒன்று பிணக்குக் கொள்ளவில்லை. மனிதனை அப்போது சமயம் பிணைத் தது. ஆனால், இப்போது சமயத்தின் பேரால் மனிதன் பிரிக்கப்படுகிறான். மனிதனை இணைப்பதற்குதான் சம யம், பிரிப்பதற்கு இல்லை. மதம் என் பது போதை, மதத்திற்கு பிறந்ததுதான் சாதி, இவை இரண்டையும் மக்கள் விரட்டிட வேண்டும். மேலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் நாட்டில் ஏராளமான தமிழ் பெயரில் ஊர்கள் உள்ளன. இதே போல் ஹரப்பா முகஞ்சதாரோவில் 150 தமிழ் பெயர்கள் உள்ளன. அது தான் தமிழ் வாழ்ந்த அடையாளம். ஆகவே, தமிழன் இழந்த வரலாற்றை மீட்க வேண்டும். தமிழன் தன்னை அறிய வேண்டும். தனது வரலாற்றை அறிய வேண்டும். வரலாற்றை மறந்தால் வரலாறு படைக்க இயலாது. கேரளா, கர்நாடகத் துக்கு மூத்த தாய் மொழி தமிழ் மொழி. வேலுநாச்சியார் போன்ற வீரமிக்க வர் என வடநாட்டு ஜான்சி ராணியை நம்மவர்கள் போற்றுகின்றனர். ஆனால், அங்கு வேலுநாச்சியாரை போன்றவர் இவர் என யாரும் ஒப் பிட்டு பேசுவதில்லை. வேலுநாச்சி யாரை விட 70 ஆண்டுகள் பின்னவர் ஜான்சி ராணி. ஆகவே, இத்தகைய ஒப்பீடுகளால் நாம் தோற்றுப் போகி றோம். தமிழர்களின் வீரத்தை நாம் பறைசாற்ற வேண்டும்.  ஆரியத்தைவிட தமிழ் மூத்தக்கூடி, இடையில் வந்து நம்மை ஆளுமை செய்தான், இதனால் தெருக்களிலே தமிழன் நுழைய போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம். ஆனால் கரு வறைக்குள்ளே இன்னும் தமிழ் போக வில்லை. தமிழில் அர்ச்சனை செய்ய முடியவில்லை.

அடுத்த மத பெண்கள்  மீது கரிசனம் காட்டி சட்டம் இயற்று கிறவர்கள், தங்கள் மத பெண்கள் மீது ஏனோ கரிசனம் வைப்பதில்லை.  ஆண், பெண் சமம் என்று சொன்னா லும் ஐயப்பன் சாமியை தரிசிக்க பெண்களை விடுவதில்லை. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நம்மை பிரித்து வருகின்றனர். இவற்றை யெல்லாம் கடந்து தமிழால் நாம் ஒன்றிணைய வேண்டும். தமிழன் நிறைய இழந்து வருகி றான். தமிழுக்கு முந்தையது சம்ஸ் கிருதம் என பாடநூலில் இடம் பெற் றுள்ளது. இது முட்டாள்தனமாது. தமிழின் பேரக்குழந்தை சம்ஸ்கிருதம். இதை நான் சொல்லவில்லை. சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.  வரலாற்றுக்கு எதிராக சிந்திக்கிற வர்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. ஏராளமான தொன்மைகளை இழந்து வருகிறோம். இவற்றை மீட்டெடுக்க, தமிழனுக்கு இன்னொரு விடுதலைப் போராட்டம் தேவைப்படுகிறது. இழந்த நமது உரிமைகளை மீட்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு தமிழரின் வரலாற்றை நாம் கற்றுத் தர வேண்டும். ஆகவே, குழந்தைக ளுக்கு புத்தகங்களை வாங்கித் தருவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். வாசிப்பை சுவாசமாக மாற்ற வேண்டும். புத்தகம் தான் ஒரு தலைமுறைக்கும், இன்னொரு தலைமுறைக்கு உறவை சேர்ப்பது, புத்தகம் மனிதனை மனிதனாக மாற்று வதாகும், இதற்காக இத்திருவிழாக் களை பயன்படுத்திக்கொள்ள வேண் டும் என்றார். முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு, கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் இரா.முனிரத்தினம், ஆசிரி யர் ப.அறிவாளி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஐ.கே.முருகன், எம்.சுருளி நாதன், ஓய்.சாதிக்பாட்ஷா, தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், கவிஞர் ரவீந்திரபாரதி, ஆசிரியை கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.