tamilnadu

img

தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

சேலம், டிச.20- சேலத்தில் பவர்கிரிட் நிறுவன அதிகாரிகளின் மிரட்டலால் தற் கொலை செய்து கொண்ட விவ சாயியின் உடலை வாங்க மறுத்து  4ஆவது நாளான வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடை பெற்றது. சேலம் மாவட்டம், நங்க வள்ளியை அடுத்த பள்ளக்கனூர்  கிராமத்தைச் சேர்ந்தவர் விவ சாயி பெருமாள். இவரின் இரண் டரை ஏக்கர் நிலத்தில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தார் உயர் மின் கோபுரம் அமைத்துள் ளனர். அதற்கான உரிய இழப்பீடு  வழங்காமல் அங்கு வளர்ந்திருந்த தென்னை மரங்களை வெட்டி யுள்ளனர். இதற்கான இழப்பீடு கோரிய விவசாயி பெருமாளை பவர்கிரிட் அதிகாரிகள் தரக்குறை வாக பேசியதால் மனமுடைந்த அவர் டிசம்.17 அன்று தற் கொலை செய்து கொண்டார்.  இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட விவசாயி பெரு மாளின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்;

குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை  வழங்க  வேண்டுமென வலியு றுத்தி பெருமாளின் உடலை  வாங்க மறுப்பு தெரிவித்து அவரின் குடும்பத்தினர் மற்றும்  விவசாயிகள் சங்க கூட்டமைப் பினர் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளியன்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து  கோரிக்கை மனுவினை அளித் தனர்.  இதில் விவசாயி பெருமாளின் மனைவி அன்னக்கிளி, தமிழ் நாடு விவசாயிகள் சங்க சேலம்  மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி,  நாமக்கல் மாவட்டச் செய லாளர் பி.பெருமாள், சேலம்  மாவட்ட துணைத் தலைவர்கள்  பி.தங்கவேலு, ஜி.மணிமுத்து, மாவட்ட பொருளாளர் ஏ.அன்ப ழகன், மாவட்ட துணைச்செய லாளர் பி.அரியாக்கவுண்டர், நங்கவள்ளி ஒன்றியத் தலைவர் சரவணன், ஒன்றியச் செயலாளர் பாலாஜி, விவசாயிகள் பாது காப்பு கூட்டு இயக்க தலைவர்  வழக்குரைஞர் ஈசன், சண்முக சுந்தரம், பொன்னையன், கவின்  உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். 

 ரூ.20லட்சம் வழங்க  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச்  செயலாளர் பி.ராமமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே பள்ளக்கானூர்  கிராமத்தை சேர்ந்த விவசாயியான பெருமாள் (45)  என்பவரின் விளைநிலத்தில் இருந்த மரங்கள் உயர் அழுத்த  மின்கோபுரம் கம்பிகள் கொண்டு செல்வதற்காக வெட்டப் பட்டது. இதற்கு இழப்பீடு வழங்க பவர் கிரீட் நிறுவனத்தினர்  மறுத்ததுடன், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர்  மூலம் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி பெருமாளை மிரட்டியுள்ளனர்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, மரங்கள் வெட்டப் பட்ட இடத்திலேயே பூச்சிக்கொல்லி மருந்து குடித்த  நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தமிழக அரசும், மத்திய அரசும் தற்கொலை  செய்து கொண்ட பெருமாள் குடும்பத்தினருக்கு ரூ.20  லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை  வழங்க வேண்டும். தற்கொலைக்கு தூண்டிய பவர் கிரீட்  அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் ஜலகண்டபுரம்  போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

;