tamilnadu

img

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

கோடையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. தென்மேற்கு பருவமழை சற்று தாமதித்தாலும் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கர்நாடகா வில் பெய்து வரும் கன மழையால் அணை கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆறுகளில் ஏற்பட்ட வெள் ளப்பெருக்கின் காரணமாக சுமார் 192 டிஎம்சி மழைநீர் எந்த பயன்பாடும் இல்லா மல் வீணாகச்சென்று கடலில் கலந்தது. இப்போதும் கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக காவிரி ஆற்றிலும், கேரளாவில் பெய்யும் கனமழை காரணமாக பவானி ஆற்றிலும் வெள்ளம் வரத்துவங்கி யுள்ளது. ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணை நிரம்பியுள்ளது. இதனால் மேட்டூர் அணை யும், பவானிசாகர்அணையும் விரைவில் நிரம்பும். இப்படி ஒருபக்கம் கண்முன்னே வெள் ளம் பாய்ந்து கடலில் கலக்கிறது. மறு பக்கம் சிலமைல் தூரத்தில் வறண்ட ஏரி களை, குளங்களை, கிணறுகளை, ஆழ் குழாய்களை வெறித்த கண்களுடன் பார்த்து  நிற்கும் நிலை அந்தியூர் போன்ற பகுதி களில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வறட்சியில் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க யாகம் நடத்தியது ஆளுங்கட்சி. இதனைத் தொடர்ந்து அம்மா அரசு எனக் கூறிக் கொள்ளும் நிலையில், அவர் வலியுறுத்திய மழை நீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் சேமிப்போம் என்று கன மழை பெய்துவரும் நிலையில் விளம் பரம் செய்கின்றனர். ஆனால் அதற்குரிய கட்டுமானம், தடுப்பணைகள் எதையும் கட்டவில்லை. இந்நிலையில், மேட்டூர் அணையின் உபரிநீரைக்கொண்டு ரூ.560 கோடி செல வில் மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி போன்ற பகுதிகளின் ஏரி, குளம் குட்டை கள் நிரப்பப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதேபோல வறட்சிப் பகுதிகளான அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, ஒன்றியங்களில் உள்ள ஏரி, குளம்,  குட்டைகளை நிரப்ப வேண்டும் என பல் லாண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் மற் றும் பொதுமக்கள் கோரி வருவதையும் பரி சீலிக்க வேண்டும்.  ஒருபுறம் “வெள்ளம்” மறுபுறம் “வறட்சி” இந்த முரண்பாடு போக்கப்படவேண்டும். ஆனால் “கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை” என்ற கிராமத்துப் பழமொழிதான் நமக்கு நினைவுக்கு வருகிறது.   - ஆர்.முருகேசன்