tamilnadu

img

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதஊதியமாக வழங்கிடுக

பெரியார் பல்கலைக் கழக தொழிலாளர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம்

சேலம்,செப்30- தொகுப்பூதிய பணியா ளர்களுக்கு ஊதியத்தை நாட்கணக்கில் கணக்கி டாமல் மாத ஊதியமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெரியார் பல் கலைக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் நிர்வாக பணி யாளர் சங்கம் சார்பில் கருப்பு உடை அணிந்து கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக திங்களன்று தொகுப் பூதிய பணியாளர்களுக்கு ஊதியத்தை நாட்கணக்கில் கணக்கிடாமல் மாத ஊதிய மாக வழங்க வேண்டும். மூன்று ஆண்டுக ளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தினக் கூலி பணியாளர்களை தொகுப்பூதிய பணி யாளர்களாக உயர்த்திட வேண்டும்.  பல்கலைக்கழக நிர்வாகம் தொழிலா ளர் சங்கத்தினை உடனடியாக அழைத்து  பேசாவிட்டால் தொடர் போராட்டமாக மாறும் என்றும். பல்கலைக்கழகத்தில் உள்ள தணிக்கை தடைகளை கூட்டம் மூலமாக உடனடியாக தீர்வு காண வேண் டும். பல்கலைக்கழகப் பணி நேரத்தை பழைய முறைப்படி காலை 10 மணி முதல் மாலை 5.40 மணி ஆக மாற்ற வேண்டும்  என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி பெரியார் பல்கலைக் கழக நுழைவாயிலில் பெரியார் பல்கலை கழக தொழிலாளர் சங்கம் மற்றும் நிர்வாக பணியாளர் சங்கம் சார்பில் கருப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அரசு தலைமை வகித்தார். இதில் செயலாளர் சக்திவேல் உள்ளிட்டு ஏராள மான பெரியார் பல்கலைக்கழக தொழிலா ளர்கள் பங்கேற்று பல்கலைக் கழக நிர் வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.