tamilnadu

img

சேவைகளை பராமரிக்க தேவையான உதவிகளை செய்திடுக

கோவை, ஆக.7- சேவைகளை பராமரிக்க தேவை யான உதவிகளை உடனடியாக பிஎஸ்என்எல்-க்கு வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மத்திய அமைச் சரவை கொடுத்த உறுதிமொழி களை நிறைவேற்றிட வேண்டும். சேவைகளை பராமரிக்க தேவை யான உதவிகளை உடனடியாக வழங்கிட வேண்டும். 4 ஜி அலைக் கற்றை உடனடியாக வழங்க வேண் டும். பணிப்பாதுகாப்பு தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றிட வேண்டும்.

சட்ட பூர்வ தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு கூட அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்வதை கைவிட வேண் டும். ஒப்பந்த ஊழியர்களின் நிலுவை ஊதியத்தினை உடனடி யாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி புதனன்று பிஎஸ் என்எல் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்ட மைப்பின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றது. கோவை தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தேசிய தொலைத் தொடர்பு சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் ராபர்ட் தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள் சங்க தலைவர்கள் பிரசன்னா, கணக்கியல் அதிகாரிகள் சங்கம் கவெட்டி ரங்கன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப் புரையாற்றினர். இதேபோல், பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலக வளாகத் தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் வட்டக்கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் பொள் ளாச்சி வட்டக்கிளை செயலாளர் ஆர்.பிரபாகரன் வரவேற்று பேசி னார். எஸ்என்இஏ அதிகாரிகள் சங் கத்தின் கிளை செயலாளர் பி.பாலாஜி மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கிளை பொறுப் பாளர் எஸ்.மனோகரன் ஆகியோர் கோரிக்களை விளக்கி கண்டன  உரையாற்றினர். முடிவில் பிஎஸ் என்எல்  ஊழியர் சங்கத்தின் கிளை ஒருங்கிணைப்பாளர் ஜி.சந்திர சேக ரன் நன்றி கூறினார்.

;