tamilnadu

img

மருத்துவப்படியை உடனே வழங்கிடுக - பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தர்ணா

கோவை, ஆக.19 - மருத்துவப்படியை வழங் கிட வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதி யர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் களுக்கு மருத்துவப்படி மற்றும் மருத்துவ ரசீதுகளை கடந்த 18 மாதங்களாக பிஎஸ்என்எல் நிர் வாகம் மறுத்து வருகிறது. அதே நேரம் பணியிலிருக்கும் ஊழி யர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செப்டம்பர் 2019 வரை உள்ள மருத்துவ ரசீதுகளை வழங்கி யுள்ளது. இந்த பாகுபாடானது ஓய்வூதியர்களுக்கு மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து அகில இந் திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூ தியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் மற்றும் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் சங் கத்தின் மாவட்ட தலைவர் எம்.ராஜா ,தபால் பிரிவு அகில இந்திய நிர்வாகி கருணாநிதி மற்றும் குடியரசு, பிரசன்னா, உமாபதி ஆகியோர் கோரிக்கையை விளக்கி உரையாற்றினர். இதில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய பகு திகளில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின்  மாவட்ட செயலாளர் வி.மகேஸ் வரன், பொருளாளர் ஏ.ஆரோக் கியநாதன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ஜேக்கப் மோரீஸ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;