tamilnadu

img

முன்களப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குக

சிஐடியு ஆர்ப்பாட்டம்

கோவை, மே 14 - கொரோனா தடுப்புப் பணி யில் ஈடுபடும் முன் களப்பணி யாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வியாழனன்று சிஐ டியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில் இந்தியா வில் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தொற்று  நோய்த்தடுப்புப் பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், குடிநீர் மற்றும் மின்சாரப் பணியாளர்கள் மற்றும்  ஊடகவியலாளர்கள் என முன்களப் பணியாளர்கள் ஓய் வின்றிப் பணியாற்றி வருகின்ற னர். ஆனால், இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் முழு மையாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் ஏராளமானோர் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டும் அதில் சிலர் மரணமடைந்தும் வருகின்றனர். 

இதனையடுத்து இப்பணி யாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும். அனை வருக்கும் மருத்துவப் பரிசோ தனைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சங்கத்னதினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை காட்டூர் சிஐடியு மாவட்டக்குழு அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச்  செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் கே.மனோகரன், ரத்தின குமார், ஏ.எல்.ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

சேலம்

சேலத்தில் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகம்,  அஸ்தம்பட்டி, மேட்டூர் தெர்மல்,  அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை, தீவட்டிப்பட்டி, சேலம் உருக் காலை மற்றும் நங்கவள்ளி உள் ளிட்ட 32 இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது,  இதில் சிஐடியு மாவட்ட தலைவர் பி. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார்,  மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.  தியாகராஜன்  உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, ஊத்துத்துக்குளி பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் கே.பெரியசாமி தலைமை தாங்கினார். செயலா ளர் வி.கே. பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். குமார் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.