tamilnadu

img

"டூவீலர் டாக்சியை" தடை செய்திடுக

ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோவை, அக். 23- கோவையில் `டூவீலர் டாக்சி’ இயங்க தடை விதிக்க வேண்டுமென்று கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப் பின் தலைவரும், சிஐடியு ஆட்டோ சங்க பொதுச்செயலாள ருமான பி.கே.சுகுமாறன் தலைமையில் ஆட்டோ ஓட்டு நர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில்  தெரிவித்திருப்பதாவது, கோவையில் 13 ஆயிரத்துக் கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் இவற்றை நம்பியுள்ளனர். இந்நிலையில், சில கார்ப்பரேட் நிறுவனங்கள், `டூவீலர் டாக்சி’ என்ற பெயரில் விளம்பரம் செய்து, இரு சக்கர வாகனங்களில் வாடகைக்கு ஆட்களை ஏற்றிச் செல்கின்ற னர். எவ்வித அனுமதியுமின்றி நடைபெறும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான ஆட்டோ  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகை யில், பயணிகளை ஏற்றிச் செல்லும் டூவீலர் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர். இதில், கூட்டமைப்பின் செயலாளர் ப.வணங் காமுடி மற்றும் சிஐடியு ஆட்டோ சங்க  தலைவர் செல்வம் உள்ளிட்ட கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

;