tamilnadu

img

ஜல்லி கற்கள் தொழிற்சாலையால் குடிநீர் தட்டுப்பாடு தொழிற்சாலையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

தருமபுரி, ஜூலை 23- அரூர் அருகேயுள்ள தனியார் ஜல்லி கற்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால் குடிநீர் தட் டுப்பாடு ஏற்படுவதாக கூறி விவசாயி கள் தொழிற்சாலையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர்- தீர்த்தமலை சாலையில் மாவேரிப் பட்டி எனுமிடத்தில் தனியார் ஜல்லி கற்கள் உற்பத்தி செய்யும் இரண்டு  தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஜல்லி கற்கள், சிறிய ரக ஜல்லி சிப்ஸ்கள், ஜல்லி பவு டர்கள் உள்ளிட்ட கனிம பொருள் கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மாவேரிப்பட்டியில் ஜல்லி கற்கள் வெட்டி எடுக்கப்படும் பகுதிகளில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில்,  200 அடிக்கும் ஆழமாக மிகப்பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப் பட்டுள்ளன. இதனால், முத்தானூர், கம்மாளம் பட்டி, மாவேரிப்பட்டி, புறாக்கல் உட்டை, எல்லப்புடையாம்பட்டி, உடையானூர், நாசன்கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிரா மங்களில் நிலத்தடி நீர் மட்டும் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டது. இதேபோல், அரசு அனுமதித்த அளவுகளை விட அதிகமான பள்ளங் கள் வெட்டப்பட்டுள்ளன. அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங் களிலும் தனியார் தொழிற்சாலை களில் சார்பில் ஆக்கிரமிப்புகளை செய்து, கருங்கற்கள் உள்ளிட்ட கனி மங்களை வெட்டி எடுத்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாவேரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, சுற்றுச் சூழல் மாசு  ஏற்பட்டுள்ளது. மேலும் மாவேரிப் பட்டி பகுதிகளிலுள்ள ஓடைகள், நீர் வரத்து கால்வாய்கள் அழிக்கப்பட் டுள்ளன.  எனவே, மாவேரிப்பட்டியில் உள்ள தனியார் ஜல்லி தொழிற் சாலைகளில் வருவாய் மற்றும் கனிமவள துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். தனியார் ஜல்லி கற்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை களை நிரந்தரமாக மூட வேண்டும் என  வலியுறுத்தி ஜல்லி தயாரிப்பு தொழிற்சாலையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த அரூர் வரு வாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக் கோட்டி, வட்டாட்சியர் செல்வகுமார், காவல் ஆய்வாளர் கண்ணன் உள் ளிட்ட அரசு அதிகாரிகள் விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் ஜல்லி கற்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் உள்ள முறை கேடுகள் குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடுகளை நீக்க விரைந்து  நடவடிக்கை எடுக்கப்படும் என அதி காரிகள் உறுதியளித்ததின் அடிப் படையில் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.