கோவை, ஆக. 25- கோவையில் மனைவி பெயரில் போலி டிரான்ஸ் போர்ட் பில் தயாரித்து ரூ.42 லட்சம் மோசடியில் ஈடு பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலை மறைவான மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், சவுரிபாளையம் என்.ஜி.ஆர் வீதியை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் சஞ்சீவிகுமார் (34) . இவர் உப்பிலி பாளையத்தில் உள்ள வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களுக்கு லாரிகளில் பார்சல் அனுப்பும் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளை மேலாளராக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை வேலை பார்த்தார். அப்போது தன்னுடைய மனைவி கவிதா பெய ரில் போலியாக டிரான்ஸ்போர்ட் பில் தயாரித்துள் ளார். நிறுவனத்துக்கு வரும் பார்சல்களை நிறுவனத் தின் பெயரிலேயே வெளியூர் மற்றும் வெளி மாநி லங்களுக்கு அனுப்பிவிட்டு வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் பணத்தை தன்னுடைய மனைவி கவிதாவின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து சஞ்சீவிகுமார் வேலை பார்த்த நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்பு கணக்கு தணிக்கை நடைபெற்றது. அப்போது சஞ் சீவிகுமார் மனைவி பெயரில் போலி பில் தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நிறுவன பொது மேலாளர் உதயகுமார் கோவை மாந கர குற்றப்பிரிவுதுறையில் புகார் அளித்தார். இதனை யடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்ச ரண் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளியன்று சஞ்சீவி குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைம றைவாக உள்ள கவிதாவை தேடி வருகின்றனர்.