tamilnadu

img

முதலிபாளையம் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

திருப்பூர், நவ.22- திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் ஊராட்சி கிராமங்கள் அதிகளவு டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதியாக உள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் நிலவேம்பு குடிநீர் பொது மக்களுக்கு வழங் கப்பட்டது.  மேலும், காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள  காரணத்தினால் மேலும் இரண்டு நாட்கள், ஞாயிற்றுக்கிழமை வரை நிலவேம்பு குடிநீர் வழங் கவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.