தருமபுரி, ஜூன் 25- ஏரி மற்றும் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை மீட்டுத்தர கோரி கெண்டேனஅள்ளி, உலகான அள்ளி பகுதி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம் அருகே கெண்டேன அள்ளி கிராமம் உள்ளது. இக்கிரா மத்தின் அருகே சாஸ்திர முட்லு மலையோரத்தில் ஏரி இருந்தது. இயற்கை சீற்றத்தின் காரணமாக ஏரியின் கரை அடித்து செல்லப்பட்டது. இந்த ஏரியில் 1981 ஆம் ஆண்டு அணை கட்ட ரூ.3 கோடி மதிப்பில் அப் போதைய ஆட்சியாளர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு 1987 ஆம் ஆண்டு அணைகட்ட ஆர்.டி.ஒ, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது காவிரி பிரச்சனை இருந் ததால் பிரச்சனை முடிந்த பிறகு அணைகட்டலாம் என அத்திட் டத்தை நிறுத்திவைத்தது. இந்நிலையில், ஏரியை சில நபர்கள் ஆக்கிரமித்து நீர்நிலை யையே சீர்குலைத்து வருகின்றனர். இதேபோல், கெண்டேஅள்ளி ஊராட்சிக்குபட்ட உலகான அள்ளி கிராமத்தில் சர்வே எண் 206 குட் பட்ட குட்டை உள்ளது. இந்த குட் டையும் ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும் இவ்ஊராட்சியில் கடு மையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.இப்பகுயில் கிணறு வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. எனவே இப்பகுதியில் விவ சாயத்தை மேம்படுத்த ஏரி மற் றும் குட்டை ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி திங்களன்று அப்பகுதி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.