tamilnadu

img

பூண்டி பேராட்சியில் குடிநீர் கேட்டு மனு

அவிநாசி, ஜன. 31- அவிநாசி அருகே பூண்டி பேரூராட்சிக்கு இரண்டாவது திட்ட குடிநீர் வழங்க வேண்டுமெனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம், பூண்டி பேரூராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இம்மக்கள் திருப்பூர் மாவட்டத்தின் முதலா வது குடிநீர் திட்டம் மூலம் பயன்பெற்று வந்தனர்.   இத்திட் டம் கைவிடபட்டுள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்க ளாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். ஆகவே, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க முதலாவது திட்டத்திற்கு மாற்றாக   இரண்டாவது திட்ட குடி நீர் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் அப்பகுதி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.  இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   ஒன்றி யக் குழு உறுப்பினர் சுப்பிரமணி தலைமையில் திமுக பாரதி, சிபிஐ பொன்னுசாமி, காங்கிரஸ் தட்சிணாமூர்த்தி, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி சென்னியப்பன் உள்ளிட்ட அனைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திருமுருகன்பூண்டி பேரூ ராட்சி அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர். இம்மனு வைப் பெற்றுக் கொண்ட பேரூராட்சி அதிகாரிகள் விரை வில் குடிநீர் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

;