புளியம்பட்டி, டிச. 16 – ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்துள்ள நல்லூரில் அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புன்செய் புளியம்பட்டியை அடுத்த நல்லூர் ஊராட்சியில் முல்லை நகர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 100 வீடுகளில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் பல வருடமாக சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் நிறை வேற்றப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தார் சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நீர் தேங்கி இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்ப வர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இம்மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல வித தொற்று நோய்கள் பரவுகின்றன. இதுகுறித்து பலமுறை நல்லூர் ஊராட்சியிடம் மனு அளித்தும் எந்த இதுவரை எந்த பயனும் இல்லை. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.