சீரமைக்க கோரி வாலிபர் சங்கம் நூதனப் போராட்டம்
திருப்பூர், நவ. 29 – திருப்பூர் பி.என்.ரோடு பூலுவபட்டி பிரி வில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை ஆணையர் அலுவலகம் அருகே சாலை யில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரி இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூத னப் போராட்டம் நடத்தினர். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை ஆணையர் அலுவலகம் அருகிலேயே சுகா தார சீர்கேடு ஏற்படுத்தும் கழிவுநீர் பெருக் கெடுத்து ஓடுகிறது. அத்துடன் சாலையின் ஒருபுறம் குளம் போல் தேங்கியிருக்கும் கழிவுநீரும், மழைநீரும் நிரம்பி வெள்ளமாக சாலையின் குறுக்காக மறுபுறம் செல்வ தால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அல் லல்படுவதுடன், விபத்தில் சிக்கும் ஆபத்தும் உள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு மழைக் காலத்தில் இங்கு நிரம்பிய நீர் கருப்ப ராயன் கோயில் குடியிருப்புப் பகுதியில் வீடு களுக்குள் புகும் நிலை ஏற்பட்டதால் அப்ப குதி மக்கள் பாதிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக தொடரும் பிரச்ச னையாக இருந்தாலும் மாநகராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வு காணாமல் இருக்கிறது. எனவே இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றி யக்குழு சார்பில் வெள்ளியன்று நூதனப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. கழிவு நீரை அகற்றி, வடிகால் வசதி ஏற்படுத்தித் தராத மாநகராட்சி நிர்வாகம், நிதி நெருக் கடியில் இருப்பதால் நவீன உபகரணங்கள் வாங்க வழியில்லாமல் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி, உடைந்த வாலி, பிளாஸ் டிக் குடம், பிளாஸ்டிக் குவளை ஆகிய வற்றுடன் பிச்சம்பாளையம் புதூரில் உள்ள இரண்டாவது மண்டல அலுவலகத்தை வாலிபர்கள் முற்றுகையிட்டனர். கழிவுநீரால் சாலை முழுக்க சாக்க டையாய் மாறிப்போய் தினம்தோறும் ஏற்ப டும் சாலை விபத்துகளை தடுத்து நிறுத் தவும், குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகும் சூழல் உருவாகாமல் தடுத்து நிறுத்தவும், இத னால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை களை யவும் முழக்கமிட்டனர். இப்போராட்டத்துக்கு வாலிபர் சங்க வடக்கு ஒன்றியத் தலைவர் டி.சதீஸ்குமார் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செய லாளர் எஸ்.அருள், பொருளாளர் ஆ.சிகா மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்கத்தின் முன்னாள் தலைவர் பாண்டியன், நிர்வாகிகள் ராஜாமணி, செல் வக்குமார், தன்ராஜ், கே.விக்கி, இம்ரான், பாலாஜி, ரமேஷ் உள்பட 40க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் முடிவில் மண்டல உதவி ஆணையர் செல்வநாயகம், உதவிப் பொறியாளர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோரைச் சந்தித்து நிர் வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 15 நாட்களில் கோரிக்கைகளை நிறை வேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதிய ளித்தனர்.