tamilnadu

img

நாடாளுமன்றக் குளிர்கால தொடர் முடிந்தது

புதுதில்லி,டிச.13- நாடாளுமன்றத்தின் இரு அவை களும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.  நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவம்பர் 18 ஆம் தேதி கூடியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குடியுரிமை மசோதா, எஸ்.பி.ஜி பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.   மத்தியப் பிரதேசத்தின் கோட்டா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நரேந்திர மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இங்கே தினமும் ‘ரேப் இன் இந்தியா’ நடைபெறுகிறது. உத்தரப்பிரதே சத்தில் பாஜக எம்எல்ஏவால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். பின்னர் அந்த பெண் மோச மான விபத்தில் சிக்கினார். ஆனால், அதைப் பற்றி பிரதமர் மோடி ஒரு  வார்த்தைகூட பேசவில்லை என்று  சாடினார்.  ராகுலின் பேச்சால் ஆத்திர மடைந்த பாஜக உறுப்பினர்கள் வெள்ளியன்று மக்களவையில்  அமளியில் ஈடுபட்டனர்.  இதைத் தொடர்ந்து மக்களவையைதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.