tamilnadu

img

இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர கோரிக்கை

ஆனைமலை, செப்.26- பொள்ளாச்சி அடுத்த ஆனை மலை தாலுகாவிற்குட்பட்ட  திவான்சா புதூர் சுமிதா நகரில் ஆபத்தான நிலையில் உள்ள  தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு உடனடியாக புதிய  தொகுப்பு வீடுகள் கட்டித்தர  அப்பகுதி பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த ஆனைமலை தாலுகாவிற்குட்பட்டு திவான்சா புதூர் கிராமம் உள்ளது. இக் கிராமத்தில் மலசர் சமூகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பழங் குடியின குடும்பங்கள், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமிதா நகர் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர்.  இவர்கள் அனை வரும் கொத்தடிமை மீட்பு மறு வாழ்வு திட்டத்தின் கீழ் தனியார் தோட்டங்களிலிருந்து கொத்த டிமைகளாக இருந்து அரசால் மீட்கப்பட்டு இப்பகுதியில் குடி யமர்த்தப்பட்டனர். தற்போது இக்குடியிருப்புகள் அனைத்தும் மழையால் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.   இதனால் உயிருக்கு அச்சுறுத் தும் விதமாக உள்ள இக்குடியி ருப்புகளை கைவிட்டு சிலர் மீண்டும் தனியார் தோட்டங்க ளுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். மேலும், இப்பகுதியில் இலவச நிலப்பட்டா வழங்க வேண்டியும்,  அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை,  சாலை, சாக்கடை வசதிகள் என அடிப் படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாததால் பெரும் சிரமங் களுக்கு பழங்குடியின மக்கள் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரம சிவம், ஆனைமலை தாலுகா தலைவர் கே.பத்மினி தலைமை யில் 50க்கும் மேற்பட்ட பழங்குடி யின மக்கள் புதனன்று பொள் ளாச்சி சார் ஆட்சியர் அலுவல கத்தில் கோரிக்கை மனு அளித்த னர். இம்மனுவை பெற்றுக் கொண்ட பொள்ளாச்சி வரு வாய் கோட்டாட்சியர் இரா.ரவிக் குமார், ஆபத்தான நிலையில்  உள்ள அனைத்து தொகுப்பு வீடுகளும் சீரமைத்து தர நட வடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என உறுதிய ளித்தார். இதனையடுத்து பழங் குடியின மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

;