ஓட்டல்களில் ஆம்லெட், ஆணியன் தோசை நிறுத்தம்
சேலம், நவ.29- வெங்காயம் விலை உயர்வு காரணமாக சிறிய, நடுத்தர ஓட்டல் களில் ஆம்லெட், ஆணியன் தோசை நிறுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கை யாளர்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர். வடமாநிலங்களில் பெய்த கன மழையால், அங்கு பெரிய வெங் காயம் விளைச்சல் பாதிக்கப்பட் டுள்ளது. இதன் காரணமாக வட மாநிலங்களில் இருந்து வழக்கமாக வர வேண்டிய பெரிய வெங்காயம் வரத்து 50 சதவிகிதம் சரிந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் சின்ன வெங்காயம் விளைச்சலும் பாதிக் கப்பட்டுள்ளது. இதனால் வெங் காயம் விலை கிடுகிடுவென உயர்ந் துள்ளது. வெள்ளிக்கிழமை நில வரப்படி சேலம், நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரிய வெங்காயம் ரூ.100 எனவும், சின்ன வெங்காயம் ரூ.120க்கும் விற் பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் மார்க்கெட்டில் 2 முதல் 5 கிலோ வாங்கிய வாடிக்கை யாளர்கள் கால், அரை கிலோ வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஓட்டல்களில் ஆம் லெட், ஆணியன் ஊத்தாப்பம், ஆணியன் ரோஸ்ட், மசால் தோசை உள்ளிட்டவைகளில் பெரிய வெங் காயம் அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது. பெரிய வெங்காயம் விலை உயர்வால் சிறிய, நடுத்தர ஓட்டல்களில் ஆம்லெட், ஆணியன் தோசை சப்ளை குறைந்துள்ளதாக வாடிக்கையாளர் தெரிவித்துள் ளனர். இதுகுறித்து சேலம் ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர, பெரிய ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் தினசரி ஆம்லெட், ஆணியன் தோசைக்காக 200 டன் னுக்கு மேல் பெரிய வெங்காயம் செலவாகிறது. தற்போது பெரிய வெங்காயம் கடும் விலை உயர் வால் சிறிய, நடுத்தர ஓட்டல் உரிமை யாளர்களுக்கு கூடுதல் செலவா கிறது. இதனால் ஒரு சில ஓட்டல் களில் ஆம்லெட்,ஆணியன் தோசை வழங்குவதை நிறுத்தியுள்ளனர். சிலர் ஆணியனுக்கு பதில் முட்டை கோஸ் பயன்படுத்தி வருகின்றனர். வெங்காய விலை குறைந்தால் மட்டுமே வழக்கம் போல் ஆம்லெட், ஆணியன் தோசை வழங்க முடியும் என தெரிவித்தனர்.