பொள்ளாச்சி, ஜுன் 15- பொள்ளாச்சி அடுத்த டி.நல்லிக்கவுண்டன்பாளையத்திலுள்ள பெண்கள் இலவச பொதுக் கழிப்பிடம் மிகவும் புதர்மண்டியுள்ளது. இதனை அகற்றி பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வடக்கு ஊராட்சிக்குட்பட்ட டி.நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட பெண்கள் இலவச பொது கழிப்பிடத்தின் சுற்றுப்பகுதி முழுவதும் புதர்மண்டி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள பெண்கள் மிகுந்த அச்சத்தி லேயே அங்கு சென்று வருகின்றனர். புதரில் பூச்சிகளும், பாம்புகளும் அடிக்கடி தென்படுவதாகவும் குற்றஞ் சாட்டினர். எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலை யிட்டு கழிப்பிடம் சுற்றியும் ஆக்கிரமித்திருக்கும் புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.