tamilnadu

img

நபார்டு வங்கியின் கடன் திட்டம் வெளியீடு

திருப்பூர், அக். 23- திருப்பூரில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் நபார்டு வங்கயின் வளம் சார்ந்த கடன் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட் டரங்கில், மாவட்ட முன்னோடி வங்கியாளர் கூட்டத் தில், நபார்டு வங்கியின் 2020-21ஆம் ஆண்டிற்கான மாவட்டத்தின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை யினை  மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்தி கேயன் வெளியிட்டார். இத்திட்ட அறிக்கையில் மொத்த வளம் சார்ந்த கடனாற்றல் மதிப்பீட்டில் ரூ.12,523.10 கோடியில் வேளாண்மைத்துறைக்கு ரூ.3,349.89 கோடியும், ரூ.7,435.04 கோடி சிறு, குறு தொழில்களுக்கும், ரூ.444.75 கோடி ஏற்றுமதி கடனுக்காகவும், ரூ.208.86 கோடி கல்வி கடனுக்காகவும், ரூ.513.86 கோடி மரபு சாரா எரிசக்தி கடனுக்காகவும், ரூ.35.59 கோடி சமூக உட்கட்மைப்பு கடனுக்காகவும் மற்றும் ரூ.314.36 கோடி இதர கடனுதவியாகவும் ஒதுக்கப்பட்டுள் ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், இந்திய ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, அரசு அலு வலர்கள் மற்றும் வங்கியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;