தகுதியானவர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு
கோவை, ஜன.17- கோவை மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியம் பெற தகுதியானவர்களிடம் விண்ணப் பம் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள் ளதாவது, 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு அம்மா இரு சக்கர வாகன் திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மானி யம் பெற தற்போது வயது வரம்பு 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில்,தகுதி வாய்ந்தோருக்கு மானியத் தொகை ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலை 50% இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பயணா ளிகள் எனில் ரூ.31,250 வரை மானி யம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற 18 வயது முதல் 45 வயது வரையில் உள்ள பெண்களில் ஓட்டுநர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் வைத்துள்ள வர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மலைவாழ் பகுதிக ளில் வசிக்கும் பெண்கள், கணவ னால் கைவிடப்பட்ட பெண்கள், கண வனை இழந்த பெண்கள், மாற்றுத்திற னாளிகள், திருமணமாகாத பெண்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண் கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியா ளர்கள், சத்துணவு பணியாளர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் போன்ற பெண்கள், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறு வனங்களில் பணிபுரியும் பெண்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்று வோர், தொண்டு நிறுவனங்களை சார்ந்த பெண்கள் மற்றும் சுயத் தொழில் செய்யும் பெண்கள் ஆகியோர் இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானி யம் பெற விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலங்கள், நகராட்சி அலுவலங்கள், மாநகராட்சி அலுவ லங்கள் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் 5 மணி வரை வழங்கப்ப டும். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.