tamilnadu

img

சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுதினம் அனுசரிப்பு

கோவை, ஜன. 8-  தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக் கான போராட்டத்தில் தூக்குக்கயிற்றை முத்தமிட்டு உயிர்நீத்த சின்னியம்பாளை யம் தியாகிகளின் 74 ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று எழுச்சியோடு அனுசரிக் கப்பட்டது. கோவையில் பஞ்சாலை தொழிலா ளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் முன்னின்றவர்கள் சின்னியம்பாளையம் தியாகிகள் சின்னையன், ரங்கசாமி, ராமையன், வெங்கடாசலம். இதனால் பஞ்சாலை முதலாளியின் ஆத்திரத்திற்குள் ளாகி, அவர்களின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு ஜனவரி 8 ஆம் தேதி தூக்கு கயிற்றிற்கு உயிரை தந்து தியாகிகளாகினர். இத்தியாகிகள் நால்வரின் நினைவு நாள் ஆண்டுதோறும் சிபிஎம், சிபிஐ இரண்டு கட்சிகளின் சார்பில் எழுச்சியோடு அனு சரிக்கப்பட்டு வருகிறது.  இதன்ஒருபகுதியாக சின்னியம்பாளை யம் தியாகிகள் அறக்கட்டளை சார்பில் புதனன்று சின்னியம்பாளையத்தில் நினை வேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப் பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஐ கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தியாகி கள் மேடையில் மலரஞ்சலி செலுத்தி உரை யாற்றினர். முன்னதாக, சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனியில் இருந்து செங்கொடி  ஏந்திய ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற நினைவேந்தல் ஊர்வலம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சின்னியம்பாளையம் தியாகிகள் மேடை யில்  நடைபெற்ற  பொதுக்கூட்டத்திற்கு சிபிஎம் சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். சிபிஐ சூலூர் வடக்கு வட்டார செயலாளர் பி.எஸ்.ராமசாமி வரவேற்புரையாற்றினார். சிபிஐ  கிளை செயலாளர் ஜி.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் ஏஐடியுசி தலைவர் பி.ஜெகநாதன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் திராளானோர் பங்கேற்றனர்.

;