திருப்பூர், ஜூலை 26 – திருப்பூரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதி ராக மக்களிடம் விழிப் புணர்வுப் பிரச்சாரம் செய் வதற்காக சாமுண்டிபுரம் பகுதியில் கட்டப்பட்ட செங் கொடிகளை இரவு நேரத் தில் சமூக விரோதிகள் கிழித்து, அறுத்துவீசினர். ஆத்திரமூட்டும் இச்சம்ப வத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யுமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. வரைவு தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதுடன், மக்களிடம் கையெ ழுத்துப் பெறும் இயக்கம் வியாழனன்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக வெள்ளியன்று திருப்பூர் மாநகரின் வடக்குப் பகுதியில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக இந்த இயக்கத்திற்காக சாமுண்டிபுரம் பிரதான சாலையில் வியாழக்கிழமை இரவு செங்கொடிகள் கட்டப்பட்டன. நள்ளிரவு நேரத்தில் இங்கு கட்டப் பட்டிருந்த செங்கொடி களை சமூகவிரோதிகள் கிழித்தும், அறுத்தும் சாலையில் வீசிச்சென்றது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை காலை சாமுண்டிபுரம் பிர தான சாலையில் பிரச்சார இயக்கத்தின்போது, ஆத்திரமூட்டும் இச்சம்ப வத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ராஜீவ்நகர் கட்சிக்கிளைச் செயலாளர் த.ராம்ஆனந்த், எம்ஜிஆர் நகர் கிளைச் செயலாளர் ஏ.துரைசாமி ஆகியோர் இது குறித்து 15 வேலம்பாளையம் காவல் ஆய்வா ளரிடம் புகார் அளித்துள்ளனர்.