அரசு மருத்துவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
அவிநாசி, ஜூலை 15- அவிநாசி அருகே அரசு மருத்துவர் வீட்டில் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசியை அடுத்து சாலையப்பாளையம், ஜெய்சக்தி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ரங்கசாமி. இவர் ஈரோடு மாவட்டம், நம்பியூர் அரசு மருத்துவமணையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா, அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக் கிழமை உறவினர் வீட்டு திருமணத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு ஞாயிறன்று இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டி ருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, மூன்று பீரோக்கள் உடைக்கப் பட்டு அதிலிருந்த சுமார் இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அவிநாசி காவல் துறையினர் மோப்ப நாய், கை ரேகை நிபுணர்கள் மற்றும் தடையவியல் நிபு ணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
வீட்டுமனை கேட்டு ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூலை 15- சத்தியமங்கலத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு தாலுகா நிர்வாகி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் க.இரா.திருத்தணிகாசலம், பி.வாசுதேவன், தாலுகா நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ரங்கசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக் கையை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.