tamilnadu

அவிநாசி முக்கிய செய்திகள்

அவிநாசியில் ரூ.49.98 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி, பிப். 7- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.49.98 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.   முன்னதாக இந்த வார ஏலத்தில், பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.250 வரை அதிகரித்து இருந்தது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 3044 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண் டால் ஒன்றுக்கு ரூ.4500 முதல் ரூ.5300வரையிலும், ஆர்.சி. எச்.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6000 முதல் ரூ.6700 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1000முதல் ரூ2000 வரையிலும் ஏலம் போனது. இதனால் ஒரேநாளில் பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ.49.98  லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், சேவூர், குன்னத்தூர், அன்னூர், மேட்டூர், தஞ்சாவூர், பேராவூரணி, தர்மபுரி, ஆத்தூர், சத்தியமங்கலம், பென்னாகரம்,  கிணத்துக்கடவு, கோபி, நம்பியூர்,  புளியம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து 373 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து  21 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். சென்ற வாரத்தைவிட, இந்த வார ஏலத்தில் விலை அதிகரித்து இருந்தது.

 சாலை விபத்தில் பெண் பலி

அவிநாசி, பிப். 6- அவிநாசி அருகே கந்தம் பாளையம் பகுதியைச் சேர்ந் தவர் ஜனகன் (66). இவர் தனது மனைவி தெய்வா னையுடன் (50) இருசக்கர வாகனத்தில் ஆட்டையம் பாளையம் அருகே சென்ற போது சாலையிலிருந்த குழி யில் விடாமல் திருப்ப முயன் றபோது நிலை தடுமாறி னார். அப்போது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக் குள்ளானது.  இந்த விபத்தில் வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த தெய்வானை லாரியின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், அப்பகுதியில் சாலை பரா மரிக்கப்படாததே விபத்திற் குக் காரணம் என்றனர் மார்க் சிஸ்ட் கட்சியின் அப்பகுதி நிர்வாகிகள்.